மழைக்கு நன்றி
மழைக்கு நன்றி..
ஊரை விழுங்க
நீரை இறைத்தாய்,
புனித ஸ்தளங்களின்
சிலையை மறைத்தாய்,
இறைத்த நீரில்
துயரம் விதைத்தாய்,
ஆனால்
விதைத்த துயரத்தில்
இறைவன் பூத்திட்டான்,
ஆம்
எம் மக்களெல்லாம்
கடவுள் ஆனார்கள்,
தெருக்கள் எங்கும்
தெய்வங்களின் நற்ச்செயல்,
என் நாடே இன்று
கோவிலானது.
கடவுள் என்பது
உருவமில்லை - அது
ஒவ்வொரு மனிதனுக்குள்
இருக்கும் உணர்வு.
கடவுளை உணர்த்திய
மழைக்கு நன்றி ...