உயிரோலை உயில்

காணும்
பெண்ணெல்லாம்
நீயல்ல
மன்னிக்க!!
என்
காதலொன்றும்
பொய்யல்ல‌

நிலவிலுன் முகம்
தைத்துரசிக்க‌
பைத்தியமல்ல
மன்னிக்க!
உனத‌ழகில் ஆசை
அவிழ்த்தவன்
நானல்ல‌


பூக்களுந்தன்
புன்னகையென
கவியெழுத கவிய‌ல்ல‌
மன்னிக்க!
எனதுயிரில் மின்சாரம்
உமிழ்ந்ததுன்
புன்னகைதான் வேறல்ல‌

நீ இல்லையெனில்
இறப்பேனென்பது
மெய்யல்ல‌
மன்னிக்க!
எனதுயிரில்
உனதுயிரென்றுமே
பிரிவல்ல‌

உன்னோடு
ஊடலற்றுரிருக்க‌
உளவியலாளனல்ல‌
மன்னிக்க!
மெளனத்தில்
சிறந்தமொழி
மண்மீது பிறந்ததல்ல

உன் திருமணத்தில்
உண்மையில்
சம்மதமல்ல
மன்னிக்க!
தாலியேற்ற‌
வந்தவன்
தசரத மைந்தனல்ல‌

உன் பிள்ளைக்கு
என் பெயர்
பொருத்தமல்ல‌
மன்னிக்க!
தனிமை தாங்க
அவனொன்றும்
தயாரல்ல‌

எழுதியவர் : புலவூரான் ரிஷி (6-Dec-15, 12:16 am)
பார்வை : 185

மேலே