மழைக்கால அவலங்கள்
அழுது துடைக்கிறது
மழை
இறந்து துடக்கின்றது
உயிர் துளிகள்
உணவுக்காய் ஊர்வலம்
போகும் காலம்
கூட வந்துவிட்டதே
தேர்தல் என்றதும்
ஊர்வலமாய் வந்தவர்கள்
மர்மமாய் மறைந்தது என்ன
மழை கண்டு முகம்
மலர்ந்த காலம்
உணவின்றி துடிக்கின்றது பல
வகை உயிர்கள்
அழுது புரன்டும்
அழுக்காய் இருந்ததும்
மரணத்துக்காய் அஞ்சுகின்றது
இந்த காலத்தில்
உதவி செய்ய உயர்ந்தவன்
தேவை இல்லை
உணர்வுள்ளவனாய்
இருந்தாலும் அவன்
உபசரிப்பும் உதவியாய் என்னும்
பிறர் உள்ளம்
கவிஞர் அஜ்மலகான்
( பசறிச்சேணை பொத்துவில் )