ஓர் iravil
இரவின் அழகு எனை ஈர்க்க ,
விரைந்தேன் இரவுதனில் இரவை ரசிக்க...
கருப்பு கம்பளமாய் வானம் ...
அதில் மின்னும் நிலவின் பொன்வண்ணம் !
பூமிதனில் எதையோ தேடி தேடி ..
நடைபயிளுமே நிலவு வானமதை வருடி வருடி !
தேடியது கிட்டாமல் குறையுடன் பிறையாக ...
வளர்வாய் வெண்ணிலவே ,பௌர்ணமியில் நிறைவாக !
தடையின்றி நடைப்பயில விளக்கேற்றுமே விண்மீன்கள்...
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராசியாகும் வெண்புள்ளிகள் !
கண்சிமிட்டி ரசிக்கும் வெண்ணிலவை விடும்வரை...
விடிந்ததும் மறையுமே நிலவது வரும்வரை .
வருடுமே வாடைகாற்று மேனியை ஆனந்தமாய் ,
வருடுமே மலரும் நினைவுகள் மனதை ஏகாந்தமாய் !
நிலமகள் குளிர்ந்து காற்றை தீண்டுமே ..
பரவும் மூடுபனியும் மேனியை சீண்டுமே !
உறங்கும் மரங்கள் புல்லினத்துடன் சேர்ந்து ...
ஆர்பரிக்கும் அலைகள் கரையுடன் சேர்ந்து !
இரவின் அழகை ரசித்தேன் ஒரு நாளில் ...
கவிதையானதே வார்த்தைகளும் வெற்று தாளில் !