ஏன் ரஜினி உதவி செய்ய வேண்டும்
ஏன் ரஜினி மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவி செய்ய வேண்டும் ?
நாம் அரசாங்கத்திற்கு தானே வரி செலுத்துகிறோம் ?
அவர்கள் என்ன செய்கிறார்கள் ?
ரஜினி உழைத்து தானே சம்பாதிக்கிறார் .
அதை நாம் நம் பொழுது போக்கிற்காக
தான் சென்று திரைப்படத்தை பார்க்கிறோம் .
ஏன் நாம் சினிமாகார்களின் கையையே
எதிர்பார்க்கிறோம்? என ஒரு வலைதள செய்தியைப்
படித்தேன் . ஒரு வகையில் அது உண்மையாக
இருக்கலாம். ஆனால், ரஜினிக்கு உடல்நலம்
பாதிக்கப் பட்டப்போது அவர் யாரையும்
கேட்க வில்லை. எனக்காக விரதம்
இருங்கள் என்றும், மொட்டைப் போடுங்கள்
என்றும், இன்னும் கடுமையான விரதங்களையும்,
பிராத்தனைகளையும் மேற்கொள்ளுங்கள்
என்றும் அவர் கேட்கவில்லை. ஆனால்,
அவர் படங்களை மக்கள் பார்ப்பதோடு அவர்
உடல் நலத்தைக் குறித்தும் அதிக அக்கறை
உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதே
உண்மை !!
நான் படித்த அந்த வலைதள செய்தி
நான் மேலே எழுதி உள்ளதைவிட
மேலும், கடுமையாக எழுதி
உள்ளனர்.
இன்னும் எத்தனை மக்கள்
கடவுளிடம் என் உயிரைக்கூட
எடுத்துக்கோ என் தலைவனின்
உயிரைக் கொடுத்து விடு என
வேண்டினர் தெரியுமா ?
இதை எல்லாம் அவர் அறியவில்லையா ?
மக்கள் ஏன் அவரை எதிர்ப் பார்க்கிறார்கள்
என்றால் , அரசியல் வாதிகளைவிட
அன்பு உள்ளவர்களையே நாம்
எதிர்பார்ப்பது இயற்கையே !!!
அந்த அன்பு கேட்காமலே கிடைக்க
வேண்டும்?
கேட்டு வாங்குவது உதவி அல்ல !
அது யாசகம் !!!
இன்று நாம் அன்பு வைத்தவர் களிடம்
இருந்து யாசகமே பெரிதும் பெறுகிறோம் !!!
இது எதை தெரிவிக்கிறது என்றால்
அன்பு உள்ளவர்களும் நமக்கு
உதவியை பிச்சையாக போடுகிறார்கள்
என்று நினைக்கும் போது
அன்புக்கு விலை யாசகமே !!!!!!1
வருத்தமுடன் தெரிவிக்கும்
உங்களுள் ஒருவள் !