மரத்துப் போன

********* *******
பாறைகள்
உரசிப் பேசின ...
பனிப்புகார்
கேவிக்கேவி அழுதது ....
பகலவன்
எக்காளமிட்டுச் சிரித்தான் ....
வானம்
ஏமாந்து வெட்கியது .....
மேகம்
கொக்கரித்துக் கொதித்தது.....
மின்னல்
வேகமாய் முறைத்தது......
முகிலன்
முழங்கி வெடித்தான்......
இளங்காற்று
இரைச்சலாய் கத்தியது. .....
ஆகாயம்
தாகமாய் பொழிந்தது .....
பசும்புல் படர்ந்து
ஏளனித்து நின்றது ......
அது
விளிம்பில் முளைத்து
வேர் பீய்ச்சி அடித்தது .....
தானாக தனியாக
ஒற்றையாய் நிமிர்ந்தது .....
அது ஒரு
குருவி எச்சத்தில்
செரிமானமாகாத
விதை........
வான் நோக்கி
ஓங்கி நிற்கிறது
தன்னம்பிக்கை
அதீதம் தான் அதற்கு. ..........
அது ஒரு
மரத்துப் போன மரம். .............
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (7-Dec-15, 5:56 am)
Tanglish : marathup pona
பார்வை : 84

மேலே