லக்சுமி
![](https://eluthu.com/images/loading.gif)
********
கால் நூற்றாண்டு
கடந்து போயிற்று யாருக்கும்
லக்சுமி ஞாபகம் மறந்து போயிற்றா...
மாமர நிழலை தனதாக்கி
உறங்கி ஓய்வெடுத்து அதன்
நிழலில் என் வீட்டு
நாய்க்குட்டியுடன் தாயுறங்கி. .....
மாங்குளம் ஊடாக முறிகண்டி
கிளி பரந்தன் கொம்படி ஊரியான்
கிளாலி வரை சென்றும்
லக்சுமி துருப்பிடிக்காப் பத்தினி. ....
இரவுகள் இளவட்ட வரிகள்
இதமான நிலவுகள் யானைகள்
ஊறிய உறவுகள் காதல்கள்
உப்புக் காற்றுக்கள்
உறவாகும் இந்தப் பத்தினிக்கு.....
வான் தாக்க
சகடைகள்
பெரல் உருட்ட
விசாலித்த கறுத்தக் கொழும்பான்
கேடயம் ஆனது அச் சுந்தரிக்கு. .....
மாங்குளம் கரைத்தெடுக்க
போர்க்கண்ணன் போர் தொடுக்க
மல்லாவிக்கரை தொடங்கி
உயிலங்குளம் வரை ஓரிரவில்
தேராகி வீடாகி திண்ணையாகி
மாறிப் போனது
அந்தத் தெருச் சொந்தத்திற்கு. .......
கால் நூற்றாண்டு கடந்தும்
இன்னும் பத்திரமாய்
திடகாத்திரமாய் மாந்திடலில்
தூங்கிக் கொள்கிறது ......
துக்கத்திலும் சொர்க்கத்தில்.........
- பிரியத்தமிழ் -