தமிழனடா என் தசை ஆடுதடா
அகலாது கண்கள்
ஆழ்ந்து நோக்கிக்கொண்டு
அழுகிறேன் மனதுக்குள்
டெலிவிஷன் என் ஜன்னல்;
காட்சிகள் உருக்குகின்றன,
என்னால் என்ன செய்ய முடியும்
என்று அடிக்கடி கேள்விகள்
வந்து வந்து உறுத்துகின்றன.
எங்கோ முகம் தெரியாத அழுகுரல்
தூக்கத்தையும் நிம்மதியையும்
எடுத்து செல்கிறது;
கத்தி நான் கடிந்து கொள்கிறேன்,
கடவுளே, அவர்களை காப்பாற்று.
கன மழை தொடரும் செய்தி
என்னை மீண்டும் காயப்படுத்த
செய்வதறியாது பார்க்கிறேன்,
மழை செய்வது தாங்கி கொள்ளும்
மனிதம் செய்வதைப்பார்த்து
இறுமாப்பு கொள்கிறேன்,
தமிழனடா! என் தசை ஆடுதடா!