தெய்வங்களும் தோள் கொடுக்கும்
![](https://eluthu.com/images/loading.gif)
தெய்வங்களும் தோள்கொடுக்கும்
தாயின் கதகதப்பில்.. மழலைகள்!
தாரத்தின் கதகதப்பில் வாலிபம்!
வாலிபத்தின் கதகதப்பில் முயற்சி!
முயற்சியின் கதகதப்பில் உழைப்பு!
உழைப்பின் கதகதப்பில் உயர்வு!
உயர்வின் கதகதப்பில் வளமான வாழ்வு!
வளமான வாழ்வின் கதகதப்பில் உள்ளோரே…
வெள்ளத்தால் வறுமையின் கதகதப்பில்
வாடும் உள்ளங்களுக்கு
தோழமையாகுங்கள் சாய்ந்து கொள்ள…!
தெய்வங்களும்..தோள்கொடுக்கும்! உங்களுக்கு..!
கே. அசோகன்