செந்தமிழைப் போற்றி வாழ்க --- முன்முடுகு வெண்பா

மங்கிய அந்நிய இன்னிசை மங்கிட
எங்கிலு மெங்கிலு மிந்திய --- செந்தமி
ழாண்டிட கண்டுமே ஆழ்மனம் போற்றிட
வேண்டிய வாழ்விது வே .



பொருள் :-

மங்கிய நிலையில் உள்ள அந்நிய இசைகள் மங்கிட வேண்டும் . எங்கெங்கிலும் நமது செந்தமிழ் ஆண்டிட வேண்டும் . இதுவே ஒவ்வொரு தமிழரின் ஆழ்மனத்திலும் நிறைந்து செந்தமிழைப் போற்றிட வேண்டும் . மங்காத செந்தமிழைப் போற்றி வாழ்வதே தமிழரின் கடமை .


தந்தன ---- சந்தம் முதல் இரண்டு அடிகளுக்கு மட்டும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Dec-15, 12:05 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 45

மேலே