அன்புடன் அண்ணன் செபஸ்டினுக்கு

உனக்கு ஒரு காவியம் எழுத
இறந்த காலத்தை நினைவூட்டினேன்
அட இது நாம் வாழ்ந்த வாழ்க்கை தானா
சற்று கூட சறுக்கள் இல்லை – சகோதரா……….

பத்து ரூபாயோடு நீ விடுதிக்கு செல்லும் போது
பக்குவமாய் பத்து பைசா மிட்டாய் வாங்கிதருவாயே
உண்ட வாயும் , ருசித்த நாவும்
செத்துவிடவில்லை சகோதரா
மறக்க முடியா அன்பை

கவலையில் உனக்கு போன் செய்தால்
உன் புன்னகை ஒன்று போதும்
நான் கண்ட கவலைகள் மறக்க
அளவிட முடியா அன்பு உன் அன்பு சகோதரா…………………..

இது தான் வாழ்க்கை என்று நீதான் அடிக்கோடிட்டாய்
சறுக்கள்கள் நிறைய சந்தித்து விட்டேன்
சத்தியமாய் உன் பங்கு அதில் இல்லை
மனம் தளர்ந்து விடாதே என்று
தோளில் நீ தட்டிய ஓசையில் தான்
இன்றும் என் பயனம் தொடர்கிறது............

உன் கண்களில் நீர் வடிந்தால்
என் கண்களும் கலங்கும் என்பதை நீயும் அறிவாய்
சோகங்கள் ஆயிரம் உனக்குள் உண்டுதான்
அதை தீர்க்கும் வழியும் நீயே தான்
என்பது எனக்கு தெரியும்!

எமனுக்கே தண்ணி காட்டியவன் நீ -இவ்
உலகத்திற்க்கா அஞ்சிவிட போகிறாய்
அடைகலத்தான் கூட்டில் கழுகு நுழைந்தது போல
நம் வாழ்கையில் ஆயிரம் சோகங்கள்
சாதியெத்து போனாலும் நாதியத்து போக மாட்டோம்
தலையே போனாலும் தன்மானம் விடமாட்டோம்
சரிதானே சகோதரா…………………………………………


கடவுள் இருப்பதை கனவிலும் மறவாதே!
கடவுள் இல்லை என்பதை துளியும் நம்பாதே!
கருணையுள்ளம் கொண்டவன் நீ
கல்லாய் மட்டும் இருந்து விடாதே…….

உன் குணம் யாருக்கு வரும்
உன் எண்ணம் யாருக்கு தோண்றும்
கவலையே நினையாதே சகோதரா
கண்ணீரோடு போராடு கடவுள் முன்பு மட்டும்

போராட்டமே வாழ்க்கையான நமக்கு
போராடி பார்ப்போம்
வீழ்ந்தால் அனுபவம்!
வென்றால் சரித்திரம்!

முயற்ச்சி செய்தால் தவறில்லையே சகோதரா...........................

என்றும் உன் அன்புடன்
உன் தம்பி -மடந்தை - ஜெபக்குமார்

எழுதியவர் : மடந்தை -ஜெபக்குமார் (7-Dec-15, 11:02 pm)
பார்வை : 203

மேலே