கட்டிலோரக் கண்ணீர்

கட்டிலோரக் கண்ணீர்.
-----------------------------
அந்த பூனைக்குட்டி
போன பிறப்பில்
காற்றாக பிறந்திருக்க வேண்டும் .
வருவது தெரியாமல் வந்து
பூமரத்தின்கீழ் ஹாயாக படுத்து விடுகிறது .
குடும்ப பிரச்சனையாம்.
ஏன் இந்த பூனை
எலியை திருமணம் முடித்தது.
எப்படியோ பொறி வைத்து பிடித்து
கட்டி விட்டார்கள் .
பூனையுடன் எலி விளையாடுவது
எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.
அந்த பூமரத்தால் மட்டும் இதை
புரிந்து கொள்ளவே முடியவில்லை.
கட்டிலோரக் கண்ணீரை
காணும் படியே
பூமரம் பூத்திருந்தது
யன்னலுக்கப்பால்.

பிரியத்தமிழ் - உதயா .

எழுதியவர் : பிரியத்தமிழ் உதயா... (8-Dec-15, 11:46 pm)
பார்வை : 147

மேலே