கண்ணுறாவி நினைவு
* * * * * * * * * * * * * * * *
எங்கு வைப்பேன்
உன் துணை நினைவுகளை
யாருக்கும் தெரியாமல்
இரகசியமாய்
பூட்டி வைக்க வேண்டும்
திறப்பைக் கூட
தெரியாத இடத்தில்
ஒளித்து வைக்க வேண்டும்
நினைவுகளை
உரசல்கள் இன்றி
உரைக்கிறேன் உன்னிடம்
கடிதமாய் வரைய அது
காற்றிலே படபடக்கும்
என் உயிரில் இருந்து
நீண்டு செல்லும் உன் நிழல்
காற்றில் மழையில்
இருளில் குளிரில்
என் உயிர்
உன் நிழலின் துணையோடு
அதற்கு
ஒளிந்திருப்பதற்கு
வேறு இடம் தெரியவில்லை
* * * * * * * * * * * * * * * *
- -பிரியத்தமிழ் -