சாளரம் பூத்தது

* * * * * * * * * * * * * * * * * *
விடிந்து விட்டது என்பது
யன்னல் வழி வந்த
வெளிச்சத்தில் தெரிந்தது
இழுத்துப் போர்த்திய போர் வை
இன்னும் மேலாக
போர்த்திய இருளை
கடந்தும் இருட்டியது
அப்போது தான்
கண்கள் சொருகுகின்றன
நயனம் நடனமிடுகின்றது
அருகே அலாரம் அடித்த தொலைபேசிகள்
தூரம் செல்கிறது
அசை போட்டிருந்த ஞாபகங்களை
விழுங்கிக் கொள்கிறது சயனம்
உன்
காலை வணக்கத்திற்காய்
தேடிக் கொள்கிறது
காத்திருந்து. ..இதயம்
விழிப்புக் கொண்டு
அண்ணார்ந்து பார்க்கிறேன்
சொன்னது என்னைப் பார்த்து ஏளனமாய்
சுவரில் படுத்திருந்த கடிகாரம்
அவன் உன்னை மறந்திருப்பான்
என்னைப் போல்
நீ தான்
சுற்றிச் சுற்றி வருகிறாய். .......
- பிரியத்தமிழ் -