ஆண்மை இழந்த மகன்
கட்டின உடையோடே
கட்டிக்க போறவள
கூட்டிட்டுப் போகாம
எட்டின எல்லாத்தையும்
மூட்டை கட்டிட்டு
கம்பி நீட்டிட்டு போற நீயும்
ஆண்பிள்ளைதானா சொல்!!
நெஞ்சை நிமிர்த்தி நீயும்
துணிஞ்சி எழுந்து வந்து
காதல் சொன்ன விதம்
அப்பப்பா என்னே ஆண்மை
இப்போ பெண்மை மிஞ்சும் உன்னை
காணும் எனக்கல்லோ
ஆண்மை துடிக்கிறது
வெற்கித் தலை வீழ்கிறது
கரம் பற்றி வாழ்ந்திடாமல்
அவள் கரம் பற்றி வந்ததையும்
பாவம் அவள் பெண்மையையும்
மோகம் ஆசை கழிந்த பின்னே
கரும்பின் சக்கையாய்
துப்பும் உனக்கு
துப்பும் இல்லை
மனம் கொண்டவளை
மணம் முடிக்கத் திடமுமில்லை!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
