மாபெரும் மடமை

வந்தது கண்டு மகிழ்ந்திடாமல்
வந்த வழி காணத்துடிப்பதும்
அதில் குறை காண விளைவதும்
இவ்வுலகின்
மாபெரும் மடமை!!
வந்ததை ஏற்று வாழ்த்துக்கள் சொல்லி
வாழ்ந்திட வழிதேடாமல்
முரண்பாடுகள் வளர்த்து
மறை பொருள் எடுத்து
அதில் கறை படப் பேசுவது
அதை விட மடமை!!