பிச்சு பிச்சு பிச்சிக்கின்னு பாடல் - சிஎம் ஜேசு
பிச்சு பிச்சு பிச்சிக்கினு
கிடச்சதெல்லாம் சுருட்டிக்கினு
பாக்கும் பக்கம் புல்லா இங்கே
வெள்ளம் வந்துடுச்சே
* * * * * * * * * * * * * * * * * * * * ( பிச்சு ..
இடியில்லாத மழைதான் - இது
மின்னலில்லாத மழைதான்
கொட்டா கல்லு மழைதான் - ஆனா
நிரஞ்சி வழிஞ்ச மழைதான்
சாந்தமாக வந்து மக்கள
காந்தமாக இழுத்த மழைதான்
வெள்ளம் வெள்ளம் வெள்ளம் வெள்ளம்
இனிப்பு இல்லா கசப்பு வெள்ளம்
உள்ளம் உள்ளம் உள்ளம் உள்ளம்
நொந்து போயி உடைஞ்சதுள்ளம்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * ( பிச்சு பிச்சு ..
ஒரு நாளா இரண்டு நாளா ஒரு மாசமா
இருட்டாலும் ரோட்டாலும் படு மோசமா
நாடிங்கே ஒடுங்கித்தான் போச்சுது - அட
யாரறிவார் வானத்தோட சூழல
ஏரி குளம் நேறம்பிதான்
பயந்து ஓடச் சொல்லிச்சு
ஆறு பாலம் மூழிகிதான்
அச்சத காட்டி மிரட்டுச்சு
முடிஞ்ச அது தெரிஞ்சா - பெரு
மூச்ச நாம விட்டுடுவோம்
பழசா ரொம்ப தினுசா -அட
நாம இங்க நிக்கிறோமே
* * * * * * * * * * * * * * * * * * * * * * ( வெள்ளம் ..