அந்த வேளை
அழகான உன்னை இரசிப்பது என்பது
வெளியெங்கும் குளிராவி படர
உதடுகள் தாளமிடும் மழை மாலையின்
இதமான தேநீரை ஜுரித்து
ஒவ்வொரு முடக்காய் தணுப்பு அவிழும்வரை
பருகுவதைப் போலவும்
ஒரு வேனலின் பகலெல்லாம்
ஒளித்துவைத்த கள்ளத்தனங்களை
அப்பொழுதுதான் துயில் முறிக்கும்
நிலவின் கறைப்படும் நீண்ட தாழ்வாரத்தில்
ஒற்றைக்கிருந்து
தேறல் அருந்துவதைப்போலவுமான
தோன்றலின் போதையாகிறது ம்ம்ம்ம்
ஒளிந்துகொண்ட போர்வைக்குள்
ஒருஜோடி கால்கள் இணை தேடுகின்றன
உயிருறங்கும் நெஞ்சாங்குழி ஒட்டிக்கொள்ள
அவள் முகம் தேடுகிறது .
என் ஆயுள் கொடி வியர்வை
உன் மூச்சிருந்தும் வேளை
பிரபஞ்சம் ஆரூடம் சொன்னது
அது புலர்ச்சி வருடி
நிர்வாணம் அணிந்ததாக ம்ம்ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"