இதம்

இதம்..!!

தீராத சோகத்தின் போதெல்லாம்
கன்னத்தில் உருண்டோடும்
கண்ணீரை துடைப்பதாய்
மழலை கன்னம் மெழுகி
கவலைகளை துடைக்கும் போதும் …

சுகமில்லாமல்
சுருண்டு கிடக்கையில்
"என்ன ஏதாச்சும் மாத்திரை சாப்பிட்டாயா"
தண்ணீரும் மாத்திரையுமாக
வந்து நின்று உறவுகள்
அன்பான வார்த்தைகளால்
நோய்களைத் தீர்க்கும்போதும்...

நீண்ட நாட்களாக காணாத
அன்பானவர்களை
நாம் காண மாட்டோமா..??
என்று ஏங்கி நிற்கையில்
நம் எதிரில் தோன்றி
நலம் விசாரிப்பினில்
நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்போதும்...

முக்கியமான அவசர பணிகளை
முடிக்க இயலாமல்
தலை சுற்றும்போது
"நான் முடித்து தருகிறேன்
நீ ஓய்வு கொள்"
என்று
அக்கறையான நட்புகள்
நம் சுமைகளை ஏற்க்கும்போதும் ...

இதமாகத்தான் இருக்கிறது
இந்த பிறவி போதும்
என்கிற எண்ணங்கள் சிதைந்து
இவர்களுக்காகவே
இன்னுமொரு பிறவி
எடுக்க மாட்டோமா என்று..!!

எழுதியவர் : சொ.சாந்தி (12-Dec-15, 9:10 pm)
Tanglish : itham
பார்வை : 116

மேலே