அவளின் - கடிதம்

நீ இல்லை என்றால் வாழவில்லை..
நீ இலையெனில் நான் இல்லை!
என்ற வழக்கமான வார்த்தைகளால்
நான் அலங்கரிக்க விரும்பவில்லை!!

நானும் காதலித்தேன் ஒருவனை !
ஆனால் அது காதலா என்று
சந்தேகிக்க வைத்தது உன் காதல்!!

உண்மையில் உன் காதல் மீது பொறமைக் கொள்கின்றேன்!

தன்னிலைத் தவறாமல்,
உன் மரியாதைக் குறையாமல்,
திடமாய் நின்று வென்றாய் என் மனதை!!

தவறுகள் நான் செய்திட..
என் செல்ல இராட்சசியே !
நீ செய்வது தவறு என்றுரைத்து..
வழிநடத்திச் சென்றாய் என்னை!

உன் கவிதைகளின் நாயகியை என்னை நிறுத்தினாய்!!
நீ என்னைப் பார்க்கும் பாரவையினால்
என்னுள் எழுகின்ற வெட்கத்தை மறைக்க
என் இரு கைகள் போதவில்லை!!

அதனால்,
உன் காந்தக் கண்களோடு
போரிட பயபடுகின்றேன்!

விரிந்த உடல்!
திடமானக் குரல்!
தெளிவான சிந்தனை!!
ஒரு ஆணிற்கான அனைத்து குணங்களும்
உன்னிடம் இருக்க..
எது என்னை ஈர்த்தது என்று
இன்னும் ஆராய்கிறேன் நான்!
விடை இல்லை....

என்றும் உன்னுடன் வாழத் துடித்தே,
என் காதலை உன்னிடம்
கோவமாய் வெளிப்படுத்தினேன்!

என் மனதில் உள்ள காதலின் ஆழத்தை
என்னால் அளக்க முடியவில்லை!
அதன் ஆழத்தை சில சமயம்
என் கண்ணீர் துளிகள் சொல்லிவிடுகின்றன...

ஏனெனில் என் விழியில் எளிதில்
கண்ணீர் வடிந்ததில்லை !!!

எழுதியவர் : கீர்த்தனா (13-Dec-15, 12:56 pm)
பார்வை : 125

மேலே