கனவு என்பது எனக்கு

நிஜத்தில் நிராகரிக்கப்பட்ட என்
ஆசைகளின் பிரதிபிம்பம் - கனவு!

நித்திரையில் ஆழ்ந்திருக்க
நிதம் நிதம் இன்பம் தரும் -- கனவு

நாளைய பொழுதை
எதிர்பார்ப்புடன் எதிர்கொள்ள வைக்கும்
இன்று நான் காணும் --- கனவு!

பிச்சைக்காரன் கூட
பிரதம மந்திரியாகுமிடம் -- கனவு!

செருப்பு முதல் செயற்கைக்கோள் வரை
யாவும் முதலில் தோன்றிய இடம் --- படைப்பாளியின் கனவு!!

எண்ணத்தின் வண்ணத்தை
கண்முன் காட்டும் மாயாலோகம் -- கனவு!

திரைமேல் தெரிபவள்
என்னுடன் தரைமேல் ஆடுமிடம் ---- என் கனவு !!

எழுதியவர் : நேதாஜி (13-Dec-15, 1:17 pm)
பார்வை : 862

மேலே