கொடுமை - நிரலன்

மழையாய் பொழிக்கிறாய்
நனைகிறேன்.
உடலை கொழுத்துகிறாய்
எரிகிறேன்.
பாதி உடல் நனைகையில்,
மீதி உடல் எரிகையில்,
எதை ரசிப்பேன் நான்?
கொடுமை.

உயிர் எங்குள்ளது?
விஞ்ஞானமே குழம்பியுள்ளது.
உனக்கு மட்டும் எப்படி தெரியும்?
என் உயிரை கிள்ளி விட்டு ஓடிவிடுகிறாய்.
திரும்பி பார்த்து சிறுப்பிள்ளையாய் சிரிக்கிறாய்.
எத்தனை சுகம் தான் என் உயிர் தாங்கும்?
கொடுமை.

இமைகள் இறுக்கமாகவே மூடிக்கொள்கிறேன்,
இருந்தும் கனவுகளில் எப்படி நுழைகிறாய்?
தடையங்கள் விட்டு செல்.
சாட்சியற்று கிடக்கிறேன்.

இன்று இரண்டில் ஒன்று பார்த்திட வேண்டும்,
உனக்காக தான் கல்லூரி வாசலில் காத்து நிற்கிறேன்,
வருகிறாள் பார் ஒன்றும் அறியாதவளாய்.
திட்டி தீர்க்கப்போகிறேன்.

"இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கே...."


கொடுமை.
நான் திருந்தப்போவதில்லை,
என கனவுகள் திருடபடாமல் இருக்கபோவதில்லை.
உயிரை இன்றிரவும் கிள்ளுவாள்,
மீண்டும் எரிந்தே, நனைத்திட வேண்டும்,
நனைந்தே எரிந்திட வேண்டும்.
கொடுமை.

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (14-Dec-15, 12:41 am)
பார்வை : 291

மேலே