தோழன்

தோழியாக தோழனாக
வந்து விட்டால்
தயங்காதே நேரம் காலம் பார்க்காதே
அதுதான் உன் நட்பின் அடையாளம்
தோள் கொடுப்பவன் தான் தோழன்
உன்னை நம்புவன் அவனே
உன்னை இயக்குபவனும் அவனே
அவனின்றி நீயில்லை, நீயின்றி அவனில்லை
ஆயிரம் உறவுகள் அன்பு செலுத்தினாலும்
உன் நண்பனின் அன்புக்கு ஈடாகுமா
எதையும் எதிர்பாராமல் வருவதுதான்
உண்மை நட்பின் மூலதனம்
அன்பும் அக்கறையும் சேவையும்
அவனிடம் இருந்தால் தான் நண்பன்
நம்பு நண்பனை நலம் காப்பான் அவன்
செல்வங்கள் வரும் போகும் ஆனால்
நட்பு என்ற செல்வம் ஒருவருக்கு அமைந்து விட்டால்
உலகம் முழுவதும் நம்கைக்குள்
நண்பனே நண்பனே உயிராய் வருவாய்
நீயாக நானும் , நானாக நீயும் ,
எல்லாமும் நமதே நட்புக்குள் நாமிருந்தால்

எழுதியவர் : (14-Dec-15, 3:01 pm)
Tanglish : thozhan
பார்வை : 70

மேலே