நினைத்திரு.... மறந்திரு....
நினைவாகவே இருக்கிறேன்
நினைவுகளோடு நடமாடுகிறேன்
நினைக்காமலே இருந்து விடாதே
நினைவு கூர் எப்போதாவது
மறந்திரு..... எப்போதும்
நினைத்திரு.... எப்போதாவது
உணர்ந்திடுவேன் அப்போது
உயிருடன் தொடர்ந்தால்
அன்பே மன்னித்து விடு என்னை
அனுமதியின்றி உன்னுள் நான்
நுழைந்து விட்டேன் - தயவாய்
அன்பு காட்டு என் மீது
போதும் எனக்கு உன்
உண்மை அன்பு மட்டும்
என் உயிர் உள்ள நாள் வரை
கொடுப்பாயா உன் தூய அன்பை
வேண்டாம் எனக்கு அன்பன்றி எதுவும்
வேண்டுகிறேன் உன்னிடம்
அன்பாக என்னுள் இணைவாயா என்று