மானமே பெரிது ---- தரவு கொச்சகக் கலிப்பா
வானமெனும் புதுமையினை வளந்தரவும் வனைகின்றேன் .
கானமெனும் புனைகின்ற கவிதைகளை ரசிக்கின்றேன் .
ஞானமென ஒளிதரவும் நமக்காக வணங்குகின்றேன் .
மானமொன்றே பெரிதெனவும் மகத்துவத்தை தொழுகின்றேன் .
இதனால்
மானமே பெரிதென மனிதர் வாழ்ந்தால்
ஞானமே நிலைத்து ஞாயி றாக
கானம் பாடும் காட்சியாம் மனத்தில்
வானமாய் நிமிர்ந்து மண்ணில்
தானமாய் வளர்ந்து தாரணி தழைக்குமே !
( நேரிசை ஆசிரியச் சுரிதகம் )