அம்மா

‘அ’ம்மா...
‘ஆ' என அழும் முன்னே
‘இ’ சையோடுத் தூக்கி இதமாய் அணைத்தவளே
‘ஈ ’ ன்றவளே என் இனியவளே
‘உ' யிர் கொடுத்து உணர்வளித்தவளே
‘ஊ’ சித்துளையை ஊற்றாய்க் கொண்டவளே
‘எ’ ழுபிறப்பும் நீயே எனக்குத் தாயாய்
‘ஏ’ ணியாய் என் வாழ்வில் நிற்பவளே
‘ஐ’ ந்திணையிலும் உனக்கீடு இல்லையே
‘ஒ’ ப்பனை வேண்டாம் உன் அழகிற்கு
‘ஓ’ ய்வின்றி உழைப்பவளே உத்தமியே
‘ஔ’ வையாய் வாழ்வாயே அம்மா! அம்மா!

எழுதியவர் : செல்வா.மு (16-Dec-15, 6:37 pm)
பார்வை : 444

மேலே