நிறைமாத கற்பிணி

தொடு உணர்வில்
தொடரும் பந்தம்!
அசைவுகளில் ஆனந்தம்
உள்ளமெல்லாம் உன் நினைப்பு!

எடை கூடுகையில்
என்னை மறக்கிறேன்!
தொட்டுப்பார்க்கையில்
தொல்லைகளும்
தொலைதூரம்!

கவலைகள் கூடுகிறது
கவணமாய் பார்த்துக்கொள்ள!

நின்றாலும் நிதானமாய் நிற்கிறேன்!
படுத்தாலும் பார்த்து பார்த்து படுக்கிறேன்!

காணாத உன் உருவம்
கண்களில் காட்சியாய்!
கற்பணையில் காலங்களோ
காததூரம்!

கண்ணாடி முன் நிற்க்கிறேன்!
பிம்பத்தோடு பிதற்றுகிறேன்!

காதில் விழும் என்றுதானே
கை வைத்து பேசுகிறேன்!

நிறைய பேசுகிறேன்
நிம்மதி அடைகிறேன்!

எழுதியவர் : hajamohinudeen (19-Dec-15, 12:18 am)
பார்வை : 189

மேலே