நிழலின் நெருடல்கள்
* * * * * * * * * * * * * * *
என்
தீட்டப்பட்ட திட்டங்களில்
நேர்த்தியற்ற நெருடல்கள்
நெஞ்சைக் குடையும். .
முழுமை பெறாத அந்த
முயற்சிகளை
முழுங்கும் ஆயுள்கள். .
சின்னஞ்சிறு
இடைஞ்சல்களையும்
சிரம் தடுக்க முடியாமல் தவிக்கும்
நிலா முற்றமாய்
நெடுமாந்த இதயம்
அல்லல்பட்டு அழுகிச் சேறாகும்
விளையாடி விளையாடி
உடைக்கப்பட்ட
விளையாட்டுப் பொம்மையாய் - அது
ஒரு மூலை தேடும்
ஒரே வேலை எனக்கு
ஒவ்வொரு நாளும் - அந்த
இதயத்தை திருத்தி
உருமாற்றும் வேலை
சில கணங்கள் மறுத்தால்
உறுத்தலாகி உராய்வு விசையற்று
உறுதித் தன்மை போகும். .....
சிந்தனைகள் மட்டும்
சிதறாத முழு நிலவாய் - என்னுள்
சின்னா பின்னமாகும்
ஒளிக்கீற்றுக்களாய்
வந்து வந்து ஆட்சி கொள்ளும்
பிரளயம் தகர்த்தி
வெறுமையின் விளிம்புகளை
வெறித்தனமாய் வெற்றி கொள்ளும் .
- பிரியத்தமிழ் -