ஆசிபலன் கொள்ளாது ராசிபலன் நோக்குவதோ - - - - சக்கரைவாசன்

ஆசிபலன் கொள்ளாது ராசிபலன் நோக்குவதோ ?
*********************************************************************************************

பாசமுற்ற பெற்றோரை மனங்குளிர வைக்காது -- அவர்
காசுபணம் கைப்பற்றி இல்லத்துள் வெறுத்தொதுக்கி
பூசலிட்டு வெளித்தள்ளி வீதியிலே விட்டுவிட்டு
ஆசிபலன் கொள்ளாது ராசிபலன் நோக்குவதோ ?
மாசற்ற சோதியே மறையுதிர்த்த மாமணியே
காசமொத்த இந்நோய்க்கு மருந்திலையே இன்றுவரை !

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Dec-15, 9:53 pm)
பார்வை : 64

மேலே