வல்லமையும் இதுவாமோ புனரமைப்புப் பாதையிலே - - -- சக்கரைவாசன்

வல்லமையும் இதுவாமோ புனரமைப்புப் பாதையிலே
************************************************************************************************
பள்ளமொன்று காணாத வெள்ளமெனும் கொடும் சீற்றம்
கொள்ளுமிடம் அறியாது குடிலகங்கள் உள்நுழைந்து -- தான்
வெல்லுமிடம் இதுவென்று கொல்லுமிடம் ஆக்கிவைக்க
பொல்லாத புல்லரினம் வெள்ளமதை முன் நிறுத்தி
அல்லவழி பயணித்து அரசியல் புரிவதுவோ ?
வல்லமையும் இதுவாமோ புனரமைப்பு பாதையிலே !

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Dec-15, 10:08 pm)
பார்வை : 79

மேலே