அரசாங்க ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி என்றாலே எனக்கு அலர்சி.
அதுவும்,அரசாங்க ஆஸ்பத்திரி என்றால் ரொம்பவே.
அதன் வாடை ,நோயை பெரிதாக்கி விடுமோ என்ற பயம் எனக்கு.மேலும்,படுக்கையில் கிடக்கும் மற்ற நோயாளிகளின் நிலையை பார்க்கும்போது அச்சம் அதிகரிக்கிறது.அரசாங்க ஆஸ்பத்திரி செவிலியர்கள் ,ஏழைகளை அலட்சியப்படுத்துகிறார்கள்.
பட்டுக்கோட்டையில் கிளினிக் வைத்திருக்கும் ,தஞ்சாவூர் அரசு மருத்துவ டாக்டர் ,எனது மகளை அங்கே கொண்டுவந்து சேர்க்குமாறு [பத்து வருடத்திற்கு முன்பு ]அறிவுறுத்தவே,,நானும் மனைவியும் அவளை அழைத்துக்கொண்டு அங்கே சென்றோம்.
முப்பது நாற்பது நோயாளிகளை கிடத்தியிருக்கும் அந்த பெரிய அறையில்,எனது மகளுக்கும் ஒரு படுக்கை கிடைக்க,அங்கே அவளுக்கு குளுகோஸ் ஏற்றி விட்டார்கள்.நோயாளிகளின் இருமல் சத்தங்களையும்,உறவினர்களின் பொருமல் சத்தங்களையும்,கழிவறையிலிருந்து வீசிய வாடையையும் சகித்துக்கொண்டு நாங்கள் அவளருகில்
அமர்ந்திருந்தோம்.கொஞ்ச நேரத்தில் ,ஒரு மூத்த செவிலியர் பெண் வந்து,
''நோயாளிகளை தவிர எல்லோரும் எழுந்து வெளியே போங்க..தரை சுத்தம் பண்ண ஆளுங்க வந்துருக்காங்க ''என்று அதட்டினார்.
''சரி கிளம்பு '' என்று குளுகோஸ் மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த மகளை விட்டுவிட்டு நானும் மனைவியும் வெளியேறினோம்.
சிறிது நேரத்தில் விழித்துக்கொண்ட மகள்,
எங்களை காணாது தவித்து,அழுதுக்கொண்டே படுக்கையை விட்டு இறங்க,கையில் சொருக பட்டிருந்த ஊசி பிசக,இரத்தம் கொட்டியது.
அதட்டி வெளியேற்றிய செவிலியர் முன்பே அங்கிருந்து நகர்ந்திருக்க,இப்போது,அங்கே நின்றுக்கொடிருந்த வேறொரு செவிலியர்,அறைக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த எங்களைப்பார்த்து,
''யாரும்மா இந்த புள்ளையோட அம்மா..?''என்று கத்தினார்.
அப்போது தான் நிலவரம் புரிந்து,நானும் மனைவியும் அலறிக்கொண்டு ஓடினோம்.
அந்த செவிலியர் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு ,
''என்ன புள்ளைய பெத்துருக்க நீ..?அறிவு வேணாம்..?
கொஞ்சமும் பொறுப்பில்லாம தனியே விட்டுட்டு எங்கே போய் தொலைஞ்சே..?''என்று திட்டவும்,முதன் முதல் என் மனைவியை ஒருமையில் திட்டிய அவரை,
....
....
வாய்ப்பு இல்லை.
வந்துவிட்டோம்.
அரசு மருத்துவ ஊழியர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம்..
'கருணை பார்வை ' வேண்டும் என்பது தான்.
அந்த பணி அப்படியானது.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (16-Dec-15, 11:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 116

மேலே