ஆதங்கம்
பூவாக வந்து இங்கு
பொன் விலங்கில் அவள்
சுமை எல்லாம் சுமந்து நின்று
செல்லக் குமாரி என
அரசிளங் கன்னி என
கவர்ந்திடுவாள்
காதல் எனும் பொன் விலங்கால்
கலந்து நிற்க கணவனிடம்,
அவள் கண்களே அவனாக
காட்டுகின்ற பாசத்தால்
பதுமைகளாய் குடும்பத்தினர்,
ஏதும் சொல்ல முடியாது
அருமையான மருமகளாய்
வரவேண்டும் ,
வசந்தங்கள் நிறைய
மன முழுக்க நிறைந்திடவே
அனைவரிலும் அக்கறையும்
ஆதரவும் நிறைந்தவளாய் .
அன்பான வரனாக வரமாக
வர வேண்டும்
பார்கின்றோம் காக்கின்றோம் ,
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுக்கும் வரம்
மனம் முழுக்க பாசம்
இனம் புரியா சந்தோஷம்
அனைவருக்கும் அமைய வேண்டும்
எல்லோரின் ஆசீரும் அவள் மேலே
படவேணும்
என்கின்ற ஆதங்கம் எல்லோர்க்கும்
இருக்குதிங்கே ,