கூவக்கரை குடிகள்

சுவையிலா உணவு பெயருக்கோர் குடிசை
கிழிந்த ஆடை எதிர்ப்புறம் கழிவோடை
மனது மறந்து போன அருவருப்பு
மண் என்றுமே இங்கே கறுப்பு
பாதம் தேடும் மாற்றிணை செருப்பு
குளிக்க இல்லை குளியலறை ஐயோ!
குடிசையே குளியலறை அளவில் தானே
கழிப்பிடம் என்றுமே கரை யோரமாய்
வேலை என்றும் சுழலும் பம்பரமாய்
தொடக்கக் கல்வி அதை தொடங்கி
பாதியிலே அது முடங்கி,முடக்கி

விளை யாடுகிறார் வீட்டில் சிலநாள்
அலைகிறார் ரோட்டில்(சாலையில்) பல நாள்
மின்னல் வந்தால் மின்வெட்டு கழிவில்
கிடக்கும் பீங்கானால் காலில் வெட்டு
மழை பொழிந்தால் வீ டொழுகும்
தலைவன் கண் தான் அழுகும்
பெருங் காற்றுக்கு கூரைப் பறக்கும்
சேர்ந்த தகடு சேராமல் பறக்கும்
வா னிலையோ அடிக்கடி மாறுகிறது
எங்கள் வாழ் நிலையோ மாறாதா?
எங்கள் முடிவு வரை மாறாதோ??

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (17-Dec-15, 9:19 am)
பார்வை : 86

மேலே