கோப மிருகம்

.......மனம் உக்கிரமானது,
ஆயுதத்துடன் எழுந்தேன்.
எதிரியை நிர்முலமாக்கும் எண்ணம்...
உடலெங்கும் விறைப்பாக்கியது.
சட்டென எதிர்பட்டது முழு நிலைக்கண்ணாடி..
ஒ..கடவுளே...என்ன இது...
மண்டையில் கொம்பும்....சிவந்த கண்களும்...
கோரைப் பற்களும்...அகண்ட காதும்...
நீண்ட நாவும்....உடலெங்கும் ரோமமும்....
எதோ ஒரு மிருகம் போலே...
அருவருப்பான...பயங்கர...ஜென்மம் போலே...
அத்தனை கோபமும் சட்டென வற்றிட...
தளர்ந்து உட்கார்ந்து கண்களை திருப்பினேன்...
பூஜை அறையின் விளக்கின் ஜோதி....
அமைதியாய் அசைந்தாடி.....
சாந்தம் சொன்னது.