ஆணி வேராக

வளர வளர
வேர்கள் ஆணி வேராக
பூமியில் தங்கிடும்
மரங்கள் அழிவதில்லை!
மனங்களும்
முதுமை அடைய அடைய
பக்குவம் பெற்று
பயணிக்கும்!
பக்குவம் அடைந்தவர்
பழி வாங்குவதில்லை
பேராசைப்படுவதில்லை
எதிர்ப்பதுமில்லை
எதிர்பார்ப்பதுமில்லை
தூய்மையின் துளிராகிடும்
துள்ளும் உள்ளம்
குழந்தையாக்கிடும் நம்மை!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (17-Dec-15, 12:35 pm)
பார்வை : 74

மேலே