அழகாட்சி காவியம்
* நிலவின் மறுபதிப்பாய்
நியமனமாகிறாள் பெண்
அலுவலகப் பணியில் ...
பொறுப்புள்ளவர்களாகி விடுகின்றனர் - சில
பொறுப்பற்றவர்களும்...!
* யாரையும் அவள்
பொருட்படுத்தாது
கருமமே கண்ணாகிறாள் ;
ஆயினும்...
பொழியும் ஒளியாய்
பழகுகிறாள்
யாவரிடமும் ...!
ஏனோ...?
பொறுப்பற்றவர்களாகி விடுகின்றனர் - சில
பொறுப்புள்ளவர்களும்...!
* அது சரி ...;
அழகென்றாலே
ஆட்சிதானே ...!