வறுமையின் நிறம் இரத்த சிவப்பு
உங்களின் ஏளனப் பார்வையில்
என் அரைக்கால் சட்டையின்
பின்புறம் உள்ள தபால் பெட்டி,
இன்னமும் கிழிந்துவிடக் கூடும்
*****
பழையது என்று கழித்து விட்ட பின்னும்
நான் கட்டிக்கொண்டதும்
புதியதாகிவிட்டன
உங்களின் உடைகள்
****
உங்களின்
பார்வைக் குறைபாட்டை நீக்க
எனக்கு
ஒரு முழுக்கால் சட்டையும்
மேல் சட்டையும் போதும்
*****
நான்கு வீட்டில் சமைத்து
என் ஒருதட்டில் சேர்ந்த உணவு இது,
நாக்கைத் தாண்டிவிட வேண்டும்
அதுவரைதானே அது உணவு..!?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
