வரதட்சனை யாருக்கு
வரதட்சனை கொடுப்பது
ஆணுக்கா? பெண்ணுக்கா?
ஆணுக்கென்றால்,
சாதாரன குடும்பத்தில் பிறந்த,
நன்கு படித்த, சிறந்த முறையில்
குடும்பம் நடத்தும் அளவிற்கு
வருமானமும், நல்லொழுக்கமும், நற்பண்பும்,
கொண்ட ஒருவனுக்கு, நூறு சவரன், 200 சவரன் நகை,
கார், பிளாட் என்று
யாராவது கொடுத்து தன் மகளை
மண முடிக்கிறார்களா?
இல்லையே!
மணமகன் என்ன பட்டம் பெற்றார்,
எத்தனை பட்டம் வாங்கியிருக்கிறார்,
சொத்து, கார், பங்ளா என்று
இருந்தால் போதுமே!
அவன் குணம் பண்புகள் கூட
பாராமல்
அத்தனையும் கொட்டி கொடுத்து,
பெண்ணை கொடுக்கிறார்கள்,
பெண்ணும் சினிமா கனவு கண்டு மணக்கிறாள்,
தன் மகள் வசதியான வாழ்க்கை வாழ கொடுப்பது,
எப்படி ஆணுக்கு கொடுக்கும் தட்சனையாகும்?