தொலைந்த இதயம்

காதலித்தேன் என்னையும் தொலைத்தேன் இதயத்தையும் தொலைத்தேன்...
என்னை மீட்டு விட்டேன்
இதயத்தை பெற முடியவில்லை...
தொலைதவளிடம் சென்று கேட்டேன்
தொலைந்த இதயத்தை கொடு என்று...
அவள் சொன்னாள் உன் இதயத்தையும் சேர்த்து
என்னை மணந்தவனிடம் கொடுத்து விட்டேன் என்று...
அப்படியானால் எனக்கு இதயம் என்றேன் அவள் சொன்னாள் ...
உன்னை மணப்பவள் அவளுடைய இதயத்தையும் அவளுடைய காதலனின் இதயத்தையும் சேர்த்து தருவாள் என்னை போன்று....
தொலைந்த இதயம் கிடைத்தது
ஆனால் அந்த இதயம் யாருடையது என்று இதுவரை தெரிய வில்லை

எழுதியவர் : (10-Jun-11, 10:40 pm)
பார்வை : 417

மேலே