நலம்

நான் நலமாய் தான் இருந்தேன்
நலம் விசாரிப்பதாய் சிலர்
உன் நினைவை என்னுள்
தோண்டும் போது....!
உனக்கு வலிப்பதே இல்லையா .
என சீண்டும் போது...
நினைக்க மறந்தபோது வலிக்க
வழியில்லை என்கின்றேன்..!
விழியில் வழியும் ..நதியை
மறைத்துக் கொண்டு...
இப்போதெல்லாம் நான் நலமாய்
இல்லை..
எப்படியோ.. அந்த சிலரின்
ஆசை நிறைவேறிவிட்ட திருப்தியில்
அவர்கள்....

எழுதியவர் : இவள் #நிலா (19-Dec-15, 10:08 am)
Tanglish : nalam
பார்வை : 82

மேலே