நந்தவனப் பூவாய்
ஒரு வேளை
இந்த பூவிற்குள் வாசம் செய்யும்
சந்தர்ப்பம் கிடைக்கும் என்று
நான் நம்புகிறேன்
உயிர் பிரிந்த பிறகு தான்
அதற்கு வழி என்றால்
என்ன செய்ய முடியும் என்னால்
செத்துப் போகிறேன்
என்னுள்
செருகிக் கொள்வாய்
என்ற தவிப்பு
சந்தோஷத்துடன்
புடுங்கி வைப்பாயா
என்னை
உன் இதய
பூங்காவனத்துள் ..!
- பிரியத்தமிழ் -