ரங்கன் தந்த பிரசாதம்

காஞ்சிபுரம் அருகிலுள்ள கூரம் என்னும் ஊரில் ஸ்ரீவத்சாங்கர் என்னும் பக்தர் இருந்தார். ராமானுஜரை குருவாக ஏற்றுக் கொண்டார்.

செல்வ வளம் மிக்க இவர் பெருமாள் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் செய்து வந்தார். அதனால் அனைவராலும் "கூரேசர்' என்று போற்றப்பட்டார்.

பின்னாளில் குருவான ராமானுஜருடன் சேர்ந்து ரங்கநாதருக்கு சேவை செய்வதற்காக ஸ்ரீரங்கத்தில் தங்கினார்.

செல்வ வாழ்வைத் துறந்து எளியவராக வீடுகளில் உஞ்சவிருத்தி பெற்று (பிச்சையேற்று) சாப்பிட்டார்.

ஒருநாள் பிச்சையேற்கச் செல்லாமல் வீட்டில் பட்டினி கிடந்தார். அப்போது ரங்கநாதருக்கு பிரசாதம் படைக்கும் நேரம் என்பதால், மணி ஒலித்தது.

அதைக் கேட்ட கூரேசரின் மனைவி, "ஆழ்வார் இங்கு பட்டினி கிடக்க, அரங்கன் மட்டும் அமுது செய்வது நியாயமா?'' என்று சொல்லி வருந்தினாள்.

தன் பக்தனின் பசியைக் காண சகிக்காமல், ரங்கநாதரே ஒரு வைணவ அடியவர் போல வந்தார்.

"என் பெயர் அழகிய மணவாளதாசன்'' என்று சொல்லி தன்னிடமிருந்த பிரசாதத்தை கூரேசரிடம் கொடுத்து மறைந்தார்.

அதன் பின்னரே கூரேசர், மனைவி மூலம் வீட்டில் நடந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டார். பிரசாதத்தின் ஒரு பகுதியை சாப்பிட்ட கூரேசர் இரண்டு பங்கு பிரசாதத்தை மனைவியிடம் கொடுத்தார்.

அதன் சாப்பிட்ட விசேஷத்தால், பெருமாளின் அருளால் கூரேசருக்கு பட்டர், ராமப்பிள்ளை என்னும் இரு மகன்கள் பிறந்தனர்.

இவர்களைப் பெருமாளின் குமாரர்கள் என்று கூறுவர்.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (19-Dec-15, 8:58 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 372

மேலே