கற்றிடு…

படத்தில் குட்டியைப் பார்த்தாலும்
பொம்மை உருவில் கண்டாலும்,
தடங்க லின்றி ஆடதுவும்
தாய்மைப் பாசம் காட்டிடுதே,
இடைஞ்ச லென்று பெற்றோரை
எங்கோ அனுப்பிடும் மானிடனே,
கிடைக்குமுன் உனக்கும் இதுபோல
கற்றிடு ஆட்டிடம் பாசத்தையே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Dec-15, 7:47 am)
பார்வை : 67

மேலே