தவறும் தண்டனையும்
தவறும் தண்டனையும்
ஒரு வேலைக்காரன் முதலாளியைக் கோபத்தில் 'நாயே'என்று
திட்டிவிட்டான்.விஷயம் பஞ்சாயத்திற்குப் போனது.வேலைக்காரன் தவறை ஒப்புக்கொண்டு
மன்னிப்புக் கேட்டான்.
பஞ்சாயத்தார்,அவனை,பிள்ளையார் சிலைக்கு முன் நின்று நூறு
தோப்புக்கரணம் போடச் சொன்னார்கள்.
அவனும்,'என் முதலாளியை நாயே,என்று நான் சொன்னது
தப்பு,'என்று சொல்லிக் கொண்டே நூறு தோப்புக்கரணம் போட்டான்.
ஒரு தடவை நாயே என்று
சொன்னது தவறு.
நூறு தடவை நாயே என்று சொன்னது தண்டனை!

