இரவு கனவு நிலவு
பெண்ணே...
உன்னை
நேரில் காண்பதறிது...!!!
இன்று
கனவிலாவது முடியுமா...?
என தினம் தினம்
என் இரவு...!
என்று வருமோ...?
என் கனவு அதில்
உன் நினைவு...!!!
நிலவின் ஒளி பகல்
அறிவதில்லை...!
அதுவே இரவினை
தனித்து ஆளும்...!
உன் நினைவும்
எனை ஆளும்
தினம் என் இரவின்
கனவில்...!!!
என்னை
தொலைத்தேன் உன்னில்...
தேடுகிறேன் என்கனவில்...!!!
வானுக்கோ நிலவில்லா
இரவும் உண்டு...
பெண்ணே
எனக்கோ
உன் நினைவில்லா
இரவேயில்லை...!!!
இவன்
பிரகாஷ்