கன்னத்தை தடவிய கார்முகில்
அவள் அந்த
வெண்முகிலை விட்டு
எட்டிப்பார்த்து
கொக்கட்டமிட்டு
சிரித்த நிலவு !
இந்த அண்ட சராசரத்தின்
அகன்ற வெளியில்
புயலாகிப் போன
நினைவுகளால்
ஓரிடத்தில் நிலை கொள்ளாத வெண்பஞ்சு
மேகமாய் வேகமாய் அசைந்து
இழந்து கொண்டிருந்த இருப்பை
தனதாக்குகிறது
அந்த கருங்கூந்தல்
முடிமுகில்களின்
காற்றை கலைத்து அவள் கன்னத்தை தடவிய
தொடுகைகள்
அவளுக்கு பிடிக்காதது தான். ..
அதனால் தான் நிலவைத்
தேடித் தேடி
ஓடி வருகிறது !
இந்த நிலவு
ஏன் ஒழித்துக் கொள்கிறது
அந்த கார் முகிலின்
கானகத்தின் பின்னால். ..?
தெளிவானத்தின் இருக்கையை
சூறையாடி
பூமியின் இதழ் புசிக்கும்
கார்முகில்
ஏன் நிலவையும் தனக்குப் பின்னால்
ஒளித்து வைத்து
வெண்முகிலுக்கு துரோகம் இளைக்கிறது ?
அது எப்படி இருந்தாலும்
வானப்பிரவாகம்
வெண்முகில்
நிலவை முத்தமிடலால் தானே
பிரசவிக்கிறது
பூமிப்பெண்ணிற்கு ....!
- பிரியத்தமிழ் -