என் குழந்தை
அவள் என்றோ
அவன் என்றோ
அறியவில்லை...!!!
ஆனாலும்
அகம் மகிழ்ந்தோம்..!!!
அவளென்று
இருக்குமெனில் அதுவன்றோ
தந்தை சுகம்...!!!
அவனென்று
ஆகுமெனில் அது உந்தன்
அன்னை சுகம்...!!!
யாரென்று ஆனாலும் அது
எங்கள் சுகம்...!!!
உன் வருகைக்காக
அன்னையுடன் நான்
ஆவலாய்
உன் தந்தை...!!!!