வட்டி

வேரை அறுக்கும் வெளிச்சம்;
விட்டில் பூச்சியின் வாழ்க்கை!
விரைவில் எடுக்கும்;
விபரீத முடிவு!

பந்துக்களையும் மறக்கவைக்கும்
பகட்டு வாழ்க்கை!
வறுமையும் போகவில்லை;
வசதியும் ஆகவில்லை!

வெளியில் வேசம்!
உள்ளுக்குள் நாசம்!
சொல்லமுடியா
சோகம்!

மாதம் பிறந்தும்
மகிழ்ச்சி இல்லை!
சம்பளம் வந்தும்
சந்தோசம் இல்லை!

பாழாய் போன வட்டியால்;
பலநாள் தூக்கம் போனதே!
தீயாய் வளரும் வட்டியால்;
தீமை மட்டும் பெருகுதே!

எழுதியவர் : hajamohinudeen (24-Dec-15, 11:05 am)
Tanglish : vatti
பார்வை : 314

மேலே