கலை கோவில்
ஒரு சிற்பியால் அழகானது
என் செல்பி !..
உருவங்களுக்குள் ஒலிக்கிறது
உளியின் மொழி பெயர்ப்பு ..
கவிதைகளை எழுதிருக்கிறான் .,
அவைகளை அவைகளே வாசிக்கும்படியாக ..
சிரித்துகொண்டே தான் இருக்கும்.,
ஏய் அலையே ..
ஏன் சீண்டிக்கொண்டே இருக்கிறாய் அந்த சிலைகளை !..
கல் என்று சொல்லமாட்டாள்
கைவிடப்பட்ட உன் காதலி ..
சிலை என்று தான் சொல்லுவாள்
உன் இதயத்தை !.
கரைந்து கொண்டிருக்கிறது காற்றில் ..
உளியின் ஒளிக்கு பின்னல்
நீ மறைக்க நினைத்த காதல் வலிகள் .,
இன்னும் சிலையாக நீ இருந்தால் ..
என்றும் காத்து கிடப்பேன் கல்லாக இந்த வாசலில் .,
வருத்தம் வேண்டாம் !.
என்னை விட்டுவிட்டு போக ..
பல்லவன் விட்டு வைத்திருக்கிறான்
இன்னும் பல பாறைகளை ...
கல்லாக தெரிகிறது
களவாடிய இரண்டு கண்களில் !.
நான்கு விழிகளில் நாம் படமெடுத்த சிலைகள் இன்று ...
காலத்தை கடக்க கணங்கள் முயல்கிறது ..
கேமரா'இல் சார்ஜ் இன்றி அந்த காட்சி முடிகிறது ..
-esu