உன்னை தொலைத்தவள்

தொலையாத நிழலாய்
தொடர்ந்து வருவேன்
நினைவாக.. .! !!
மறந்து போனால் உன் இரவுகளில்
மறக்காமல் வருவேன்
கனவாக..!!
.. இருந்தாலும் மறந்து விட்டாய்..! !
எங்கோ தொலைந்து விட்டாய்..!

கண்ணுக்குள் கண்ணை வைத்து
விழிக்காதே.! ! என்று சொல்லி
இமைகளை பிடுங்கி சென்றாய்!!

விழிகளையும் இழந்து விட்டேன்
உனை தேடும் வழிகளையும் தொலைத்து விட்டேன்..! !

வழி தொலைத்த இவள்
எப்படி உன்னை தொடர்ந்து வர..??
பேசாமல் தொலைந்து
செல்கிறேன் நீயாவது
நிம்மதியாய் இரு..! !

இவள் நிலா

எழுதியவர் : இவள் நிலா (24-Dec-15, 4:27 pm)
Tanglish : unnai tholaithaval
பார்வை : 234

மேலே